குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா???

29 January 2026

தயிர் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் ஜீரண சக்தியையும் வழங்கினாலும், குளிர் காலத்தில் அதை உட்கொள்ளும்போது சில வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். பொதுவாக குளிர் காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி மற்றும் தொண்டை வலி ஏற்படும் என்ற அச்சம் பலருக்கும் உண்டு.

இதனைத் தவிர்க்க, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த தயிரை நேரடியாகச் சாப்பிடாமல், அறை வெப்பநிலைக்கு வந்த பிறகு (சுமார் அரை மணி நேரம் கழித்து) உட்கொள்வதே சிறந்தது.

குறிப்பாக, இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்த்து, காலை அல்லது மதிய வேளைகளில் சேர்த்துக்கொள்வது உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவும்.



குளிர் காலத்தில் பசி உணர்வு அதிகமாக இருப்பதால் செரிமான மண்டலம் மந்தமாகலாம், அந்தச் சமயத்தில் தயிர் சிறந்த ஜீரண சக்தியை வழங்குகிறது.

மேலும், தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சரும வறட்சியைப் போக்கி முகத்தைப் பொலிவாக்கவும், அதிலுள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.


இருப்பினும், ஏற்கனவே இருமல், சளி அல்லது சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் குளிர் காலங்களில் தயிர் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வது அல்லது தற்காலிகமாகத் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.