சென்னை பத்திரிகையாளர்கள் சங்க பொது குழு
12 November 2025
சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, பத்திரிகையாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் நேர்மையும் வெளிப்படை தன்மையும், பத்திரிக்கையாளர் சங்களை இணைத்து குழுவை உருவாக்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) தேதி திருச்சியில் நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர்கள் (CUJ) சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் வட்டார அளவில் பணி செய்யும் பத்திரிக்கையாளர், ஒளிப்பதிவாளர், படக் கலைஞர்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும்.
சென்னை பிரஸ் கிளப்புக்கு நிதி ஒதுக்கியது போன்று மாவட்ட அளவில் இருக்கும் பிரஸ் கிளப் களுக்கு தலா ஒரு கோடி வழங்க வேண்டும்.
மாவட்ட அளவில் வீட்டு மனை மற்றும் குறைந்த அளவில் வீட்டு மனை வழங்குவது, அரசு குடியிருப்பு வீடுகளை பத்திரிக்கையாளர்களுக்கு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நடைபெற்ற சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் CUJ பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.