விழுப்புரம்: 476 கிலோ குட்கா பறிமுதல்

06 November 2025

விழுப்புரம்: 476 கிலோ குட்கா பறிமுதல்


பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பு குட்கா பொருட்களை, கண்டமங்கலத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கண்டமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு கார்களில் 476 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வருவது குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து, மடக்கி பிடித்த போலீசார் கடத்தி வந்த விஜயகுமார், நிலேஷ் குமார், ஹக்கீம் ஆகியோரை கைது செய்தனர்.

செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்