கடலூரில் பிரேமலதா விஜயகாந்த் எழுச்சி உரை
09 January 2026
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் தேமுதிகவின் "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0" பிரம்மாண்டமாக நடைபெற்றது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பந்தலில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் க்கு கட்சி நிர்வாகிகள் வீரவாள், கிரீடம் மற்றும் சேவற்கொடியை பரிசாக வழங்கினர்.
இந்த மாநாட்டில் பேசிய அவர்
கடலூர் மாவட்டம் எப்போதும் விஜயகாந்தின் கோட்டையாகத் திகழ்கிறது என தெரிவித்தார். ரசிகர் மன்றமாகத் தொடங்கி இன்று தேமுதிக என்ற மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது.
"அவர் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறார்" என்று குறிப்பிட்ட பிரேமலதா, விஜயகாந்த் ஒரு பயமற்ற வீரர் மற்றும் வள்ளலாக வாழ்ந்தவர் என புகழாரம் சூட்டினார்.
ஒவ்வொரு தேமுதிக தொண்டரிடமும் தான் விஜயகாந்தைப் பார்ப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுவிட்டது.
மாவட்ட செயலாளர்கள் கருத்து: மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஆளுங்கட்சியோ அல்லது மற்ற கட்சிகளோ இதுவரை கூட்டணி குறித்து அறிவிக்காத நிலையில், தேமுதிக மட்டும் முன்கூட்டியே அறிவிக்கத் தேவையில்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தேமுதிக தொண்டர்களை மதிப்பவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும்.
தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், தேமுதிகவே ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
"வெற்றி ஒன்றே இலக்கு" என்ற கொள்கையோடு கட்சி செயல்படும். "தை பிறந்தால் வழி பிறக்கும்" எனக்கூறிய அவர், தேமுதிக அவசரப்படும் கட்சி அல்ல என்று உரையை நிறைவு செய்தார்....