தவர்த்தாம்பட்டு நந்திமங்கலம் குமராட்சி சுற்று வட்டார பகுதிகளில் ஆள் புடி முதலைகளின் அட்டகாசம் தொடர்கிறது
28 December 2025
தவர்த்தாம்பட்டு நந்திமங்கலம் குமராட்சி சுற்று வட்டார பகுதிகளில் ஆள் புடி முதலைகளின் அட்டகாசம் தொடர்கிறது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு மெய்யாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள சௌந்தர்ராஜன் s/o பெத்து விவசாயி வடக்கு இராஜன் வாய்க்காலில் ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு திரும்பிய போது கை கால் கழுவி உள்ளார். அப்போது தண்ணீரில் பதுங்கி இருந்த ஆள்புடி முதலை இரண்டு கைகளையும் பிடித்து உள்ளது, இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கைகளில் காயங்களுடன் அலரி சத்தம் கொடுத்து உள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் மற்றும் கிராம மக்கள் விரைந்து வந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் இராஜமுத்தையா அரசு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதே பகுதியில் மீண்டும் தொடர்கதை ஆகி வருகிறது ஆள் புடி முதலைகள் அட்டகாசம்
தவர்த்தாம்பட்டு 2025 மார்ச் சாரதி வயது 18
மெய்யாத்தூர் 2024 மே ஒய்வு பெற்ற துணை ஆய்வாளர் செல்வராஜ் வயது 65
தவர்த்தாம்பட்டு அக்டோபர் 2025 ஜெயச்சந்திரன் s/o இளவரசன் வயது 22
பழையநல்லூர் 2020 செப்டம்பர் விவசாயி அறிவானந்தம் வயது 56 உயிர் இழந்தார்
பழைய கொள்ளிடம் ஆற்றில் 500 க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. இது இராஜன் வாய்க்கால் காஞ்சாகி வாய்க்கால் மாறி மாறி உலா வருகின்றன.
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வனத்துறையினர் முதலைகளை பிடித்து முதலை பண்ணைகளில் விட வேண்டும், மற்றும் படித்துறையில் கூண்டு அமைத்து தர வேண்டும். அருகிலுள்ள வக்காரமாரி குளத்தில் விட்டாலும் தப்பித்து மீண்டும் வந்து விடுகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு...