குட்கா கடத்தல்-2 பேர் கைது.
23 October 2025
பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தல்-2 பேர் கைது.
பெங்களூரில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநலலூர் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த முருகனை (46) விசாரித்ததில் அவர் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கடத்தியது தெரியவந்தது.
தொடர்ந்து நடந்த தீவிர சோதனையில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள சுமார் 177 கிலோ குட்கா பொருட்கள் டாட்டா ஏஸ் வாகனம் மூலம் சிக்கியது இதில் கண்ணதாசன், சங்கர் ஆகிய இருவரை காவல்துறை கைது செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்