மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டிகள்

10 November 2025

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் இன்று இரண்டு அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டி நெல்சனில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. இதில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 38 ரண்களில் திடீரென மழை பெய்தது இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த மழை ஆனது 2 மணி நேரம் ஆகியும் நிற்காததால் ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி வருகின்ற 13ஆம் தேதி நடைபெற உள்ளது...