திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு
04 March 2026
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்து, இன்று அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கவும் திமுக சம்மதம் தெரிவித்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் தரப்பில் அதிக இடங்கள் கோரப்பட்ட நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது. ஏற்கனவே இக்கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காங்கிரசுக்கான இடங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.