தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசனை

10 February 2026

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, யாருடன் கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து டெல்லியில் காங்கிரஸ் மேலிடம் முக்கிய ஆலோசனையை நடத்தியது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், புதிதாக நியமிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், கூட்டணி தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.


தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தக் கூட்டத்தின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கூட்டணி மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.