மேம்பாட்டு திட்ட பணி ஆட்சியர் அப்துல் ரஹ்மான் ஆய்வு

25 October 2025

மேம்பாட்டு திட்ட பணி ஆட்சியர் அப்துல் ரஹ்மான் ஆய்வு


விழுப்புரம் நகராட்சியில் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய நகராட்சி அலுவலகத்தை புனரமைத்து திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ப.மதுசூதனன் ரெட்டி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.