ஏற்றுமதி குறித்த கருத்தரங்கு: ஆட்சியர் தகவல்
26 October 2025
விழுப்புரத்தில் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கு: ஆட்சியர் தகவல்
விழுப்புரத்தில் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள் குறித்த கருத்தரங்கு அக்.28ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாலம்மாள் வணிக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு 8925534035/9443728015 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.