குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் இடமாற்றம்.
29 November 2025
குமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (வளர்ச்சி) பணியாற்றி வந்த சுசிலா பீட்டர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் பழனிவேல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (வளர்ச்சி) நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையில் 47 அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.*