மழைக்காலம் தொடங்கியதில் இருந்தே அனைவருக்கும் சளி இருமல் பிரச்சனை தொண்டை வலி ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்காக திருச்சி மேனால் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் ஒரு மருத்துவ குறிப்பு ஒன்றை வழங்கியுள்ளார். அதில் சளி காய்ச்சல் ஏற்படும்போது தொண்டை வலி வரலாம். இதற்கு நான்கு ஏலக்காய் துண்டு மற்றும் இரண்டு சுக்கு ஆகியவற்றை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து பனைவெல்லம் சேர்த்து குடித்தால் வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலி குணமாகும் என தெரிவித்துள்ளார்.