இயற்கையின் அற்புதம்: தேங்காய் தரும் வியக்கத்தக்க நன்மைகள்!

01 January 2026

தேங்காய் நாம் அன்றாடம் உணவில் உபயோகப்படுத்தும் ஒரு முக்கியமான உணவுப்பொருள் ஆகும். 

இந்த தேங்காயின் பல்வேறு நன்மைகள் குறித்து அனைவருக்கும் தெரியுமா என்றால் அது நிச்சயமாக கேள்விக்குறியாகி உள்ளது. 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தினமும் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதில்லை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி இது தலைமுடி சருமம் வயிறு போன்றவற்றிற்கு மிகவும் நன்மை பயக்கும்..

இதனால் செரிமான பிரச்சனை சீராகும். மேலும் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. 

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் தன்மையும் தேங்காய்க்கு உண்டு. வயிற்றுப் புண்களுக்கு தேங்காய் பால் எடுத்துக் கொள்வதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் வயிற்றுப் புண்களுக்கு மட்டுமின்றி பொதுவாகவே தேங்காய் பாலில் எடுத்துக் கொள்வதால் நமக்கு மிகுந்த நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த தேங்காயை நாம் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அளவாக எடுத்துக் கொண்டால் நம் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை...