சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் தமிழர்கள் மீட்பு: பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
11 March 2026
மேற்காசியப் போர் காரணமாகத் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரிசெய்யக் கோரியும், அங்கு சிக்கியுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். போரினால் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவகங்கள் உள்ளிட்ட தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். மேலும், வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் தாயகம் திரும்ப விரும்பும் சுமார் 19 லட்சம் தமிழர்களுக்காகச் சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும் என்றும், குறிப்பாக ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 593 தமிழக மீனவர்களை மீட்க வெளியுறவுத் துறை மூலம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கோடைக்காலத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால், மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தடையற்ற மின்சாரம் வழங்க ஒத்துழைக்குமாறும் அக்கோரிக்கையில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.