பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
10 January 2026
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் (Census) இணைந்து, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை வரவேற்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (10-01-2026) கடிதம் எழுதியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை விவாதித்து மேம்படுத்த, அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இக்கணக்கெடுப்பின் மூலம் விரிவான மற்றும் நம்பகமான தரவுகளைப் பெற முடியும். இது சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரியான தரவுகள் கையில் இருக்கும்போது மட்டுமே, அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய இயலும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.