மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றி அடைந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் வரலாற்று வெற்றியை இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது என தெரிவித்தார் மேலும் இந்திய அணி தனித்துவமான வெற்றியை பெற்றுள்ளது என தெரிவித்தார். இந்திய அணியின் ஒருமித்த செயல்பாடு இந்த வெற்றிக்கு காரணம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.