பார்வையற்ற பெண்களுக்கான முதலாவது பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி டெல்லி மற்றும் கொழும்புவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா நேபாளம் அணிகள் மோதின. இதில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் அடித்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்படி பார்வையற்றவர்களுக்கான முதலாவது பெண்கள் டி20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. வெற்றிபெற்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 'தைரியம் வழிநடத்தும் போது வரலாறு உயர்த்தும்' முதல் டி20 உலக கோப்பையை வென்று நமது அற்புதமான பெண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.