திருப்பூர் மாவட்டத்தில் இன்று திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாட்டில் திமுக எம்பி கனிமொழி தலைமை தாங்க உள்ளார்.
மேலும் இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். மேலும் இதில் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.