திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடி பகுதியில் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மேடையில் பேசிய பது
தமுகவிற்கு முதல் எம்பி கொடுத்த ஊர் திருவண்ணாமலை என தெரிவித்தார். மேலும் ஆண்டி நிறைவில் நிறைவான திட்டங்களை கொடுத்துள்ளோம் என தெரிவித்த முதலமைச்சர் நான்கு ஆண்டுகளில் நாடே போற்றும் வகையில் நிறைய திட்டங்களை கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன் என கூறி ஏந்தல் கிராமத்தில் ஒரு கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கலசப்பாக்கம் கோவிலுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு உயர வேண்டும் என உழைக்கிறோம் ஆனால் தமிழகத்திற்கான நிதியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது என பேசிய முதலமைச்சர் நிதி இல்லாமல் நாடே திரும்பி பார்க்கும் வகையில் ஆட்சி அமைத்து வருகிறோம். 100 நாள் வேலை திட்டத்திற்கு பாஜக அரசு மூடுவிழா நட நடத்தியுள்ளது என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் இதனைக் கேட்க எடப்பாடி பழனிச்சாமியால் முடியவில்லை. தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமையப்போவது உறுதி. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.