திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

14 December 2025

திருவண்ணாமலை மலைப்பாம்பாடி பகுதியில் உள்ள கலைஞர் திடலில் இன்று திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். 

மேலும் இதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இந்த நிலையில் திருவண்ணாமலை திருவண்ணாமலைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

திமுக கட்சி சார்பில் அவருக்கு வரவேற்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு, முதன்மைச் செயலாளர் கே என் நேரு, மேலும் திமுக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...