திருப்பூரில் இன்று திருச்சி மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாட்டில் கூடிய மகளிர் பார்க்கும்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாக தெரிகிறது என தெரிவித்தார். மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறப்போகிறோம். என தெரிவித்த முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி என தெரிவித்தார்.
பேசிய முதலமைச்சர் தொடக்கம் முதலே திராவிட இயக்கத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றார்கள். பெண்கள் படிக்கக்கூடாது அடுப்படி தாண்டக்கூடாது என்று கூறி அடிமைப்படுத்தப்பட்ட நிலையில் அதையெல்லாம் உடைத்து எறிந்தது திராவிட இயக்கம்தான் எனவும் தெரிவித்தார்...