முதலமைச்சர் பயணம் 28-ம் தேதி ஒத்திவைப்பு

23 October 2025

 தென்காசி மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளுக்காக தமிழக முதலமைச்சர் அக்டோபர் 24 மற்றும் 25 தேதிகளில் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.. ஆனால் மழையின் காரணமாக பயணம் தள்ளி வைக்கப்பட்டு வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் தென்காசிக்கு செல்ல உள்ளார். 29ஆம் தேதி தென்காசியில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு பின்னர் அங்கிருந்து மதுரைக்குச் செல்ல உள்ளார். அங்கு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் சென்று அங்குள்ள தேவர் ஆலயத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.