சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முதல் அமைச்சர் உத்தரவு

01 December 2025

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். 

அதில் டிட்வா புயலின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களை காப்போம் எனது தெரிவித்துள்ளார். 

அக்டோபர் தொடங்கி தற்போது வரைவிலான வடகிழக்கு பருவம் மழை மற்றும் கனமழையினால் சேதமடைந்துள்ள பயிர்களுக்கு இழப்பீடுகளுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து இழப்பீடு நிதி வழங்க உத்தரவிட்டு உள்ளேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிய வைக்கும் பணிகளை தொடர்ந்து நேரடியாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும் மக்களை காக்கும் என தெரிவித்துள்ளார்...