மகளிர் உரிமைத் தொகை ரூ. 5,000 வரவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

13 February 2026

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31 கோடிப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று காலை தலா ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வரவிருக்கும் பொதுத் தேர்தலைக் காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை முடக்கச் சூழ்ச்சிகள் நடப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், அதனை முறியடிக்கும் வகையில் பிப்ரவரி மாதத்திற்கான ரூ. 1,000 தொகையுடன், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக கூடுதலாக ரூ. 2,000 என மொத்தம் 5,000 ரூபாயை ஒரே தவணையாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


மேலும், அடுத்தமுறை திராவிட மாடல் ஆட்சி அமையும் போது, இந்த உரிமைத் தொகை மாதம் ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் உறுதி அளித்துள்ளார்.