மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் உயரும்: முதலமைச்சர்

12 December 2025

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தமிழக அரசு சார்பில் வெல்லும் தமிழ்பெண்கள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர். மு க ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 16.94 லட்சம் பயனாளிகளை சேர்த்து புதிய பயனாளிகளுக்கு கணக்கு அட்டையை வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர், மகளிர் உரிமைத்தொகை திட்டம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது நினைத்து திராவிட இயக்க தொண்டனாக அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார். 

மேலும் விடுபட்ட மகள் இருக்கும் உரிமை தொகை வழங்கியுள்ளோம் என தெரிவித்த முதலமைச்சர் வரலாற்றை திருத்தி எழுதும் திட்டம் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் உயரும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்....