தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நடைபெற்று வரும் நிலையில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 21ஆம் தேதி உருவாகி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு அதிகாரிகளிடம் கலந்துரையாடிய முதலமைச்சர் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டு அறிந்தார்...