முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்

06 January 2026

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

​தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 20-ம் தேதி தொடங்குகிறது. வழக்கம்போல, ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் உரையுடன் தொடங்க உள்ளது. சட்டசபை கூடுவதற்கு முன்பாக அமைச்சரவை கூடி விவாதிப்பது மரபு என்பதால், இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

​முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு' (Assured Pension Scheme) அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. இது குறித்த நிதி ஒதுக்கீடு குறித்தும் இடைக்கால பட்ஜெட்டில் விவாதிக்கப்பட உள்ளது.


மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில் கொள்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.

​பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது...