பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல் அமைச்சர்

18 December 2025

மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக விபி-ஜி ராம்ஜி என்ற பெயரில் இந்த திட்டம் மாற்றப்பட்டு மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர். மு க ஸ்டாலின் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் 2005 ரத்து செய்து அதற்கு பதிலாக வி பி ஜி ராம்ஜி சட்டம் உன் வடிவினை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலையையும் கடுமையான எதிர்ப்பையும் தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சட்டமுன் வடிவில் உத்திரவாத வேலை வாய்ப்பை ஆண்டுக்கு 125 நாட்களாக அதிகரித்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தாலும் அதன் மற்ற விதிகள் இந்த திட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை பலவீனப்படுத்துவதாக உள்ளதுடன் மாநிலங்கள் மீது கடுமையான நிதிச் சுமைகளை சுமத்துடன் கூட்டாட்சி தத்துவத்தை அளிக்கும் வண்ணம் உள்ளது என தெரிவித்துள்ளார். 

இந்த சட்டம் உன் வடிவில் ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகோள்களின் அடிப்படையில் மாநில வாரியான திட்ட ஒதுக்கீடுகளை நிர்ணயிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் திறனற்ற தொழிலாளர்களுக்கான ஊதிய செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் முழுவதையும் ஒன்றிய அரசு ஏற்கிறது. ஆனால் இந்த புதிய சட்டமுன் வடிவில் ஊதியம் மூலப்பொருட்கள் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றுக்கான புதிய 60: 40 நிதி பங்கிட்டு முறை ஏற்கனவே நிதி நெருக்கடியை சந்தித்து வரும் பல மாநிலங்கள் மீது பெரும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் நாட்டின் கிராமப்புற ஏழைகளுக்கு ஒரு வலுவான தேவை அடிப்படையில் ஆன வாழ்வாதாரமாக திகழும் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் தொடர்வதை உறுதி செய்து விடும் பணியில் தமிழ்நாடு ஆக்கபூர்வமாக பங்கேற்க தயாராக உள்ளது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்...