அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
08 February 2026
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் திராவிட மாடல் அரசுக்குத் தொடர்ந்து தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு நடைமுறைப்படுத்தும் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும் கடைகோடி மனிதரையும் சென்றடைவதில் அரசு ஊழியர்களின் பங்கு மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால ஆட்சிக் காலங்களில் அரசு ஊழியர்கள் சந்தித்த சவால்களைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அவர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருவதை அவர் நினைவு கூர்ந்தார். சமூக நீதியையும், மாநில உரிமைகளையும் காக்கப் போராடும் இந்த அரசுக்கு, நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அரணாக இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும், அரசின் நற்பெயரை மக்களிடம் கொண்டு சேர்க்க உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.