திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21 டிசம்பர் 2025) மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
காணொளி காட்சி மூலம் இன்று மாலை 6 மணி அளவில் முதலமைச்சர் இந்த ஆலோசனையை நடத்த உள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தொடர்ந்து திமுக எதிர்த்து வந்த நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கண்டு இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நீக்கம் முறையானதா என்ற சந்தேகத்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே எழுப்பியுள்ளன. இது குறித்து சட்ட ரீதியாகவோ அல்லது களப் பணிகளின் மூலமாகவோ எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.