டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

21 October 2025

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது நெல் கொள்முதல் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து கேட்டு அறிந்தார்.