கரூர் கூட்ட நெரிசல் குறித்து முதலமைச்சர் விளக்கம்

15 October 2025

இன்று நடைபெற்ற சட்டசபையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது கரூர் துயரச் சம்பவத்தில் பிரச்சாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கியது என தெரிவித்தார். மேலும் வழக்கமாக வழங்கப்படும் பாதுகாப்பை விட இந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு அதிகமாக வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். இது மட்டுமின்றி கரூர் பரப்புரைக்கு தமிழக தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட ஏழு மணி நேரம் தாமதமாக கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்தது தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் எனவும் தெரிவித்தார். மேலும் மக்களுக்கு குடிநீர் உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை அது மட்டும் இன்றி இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் செல்ல முடியவில்லை. இதே போன்ற அதே இடத்தில் அதிமுக நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைத்திருந்தனர் எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும் கரூரில் பாதுகாப்பிற்காக 606 பேர் ஈடுபட்டனர் இது வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு எண்ணிக்கையை விட அதிகம் என முதலமைச்சர் தெரிவித்தார். எனவே இந்த துயர சம்பவம் என்பது இனி மீண்டும் நடக்கக்கூடாது எதனால் இது போன்ற பொதுக்கூட்டங்கள் பரப்புரைகள் நடத்தும் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தமிழ்நாடு அரசு விரைந்து கையாண்டது. மேலும் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.