25 அன்பு சோலை மையங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்

10 November 2025

திருச்சி பொன்மலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல வாழ்வை மேம்படுத்துவதற்காக அன்புச் சோலை மையங்கள் ஒரு மாநகராட்சியில் இரண்டு வீதம் 10 மாநகராட்சியில் 20 மையங்கள் சென்னை பெருநகராட்சியில் மூன்று மையங்கள் மற்றும் தொழில் மாவட்டங்களான ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் 2 மையங்கள் என மொத்தம் 25 அன்புச் சோலை மையங்களை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இந்த மையங்கள் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்களுக்காக முதியோர் இல்லங்கள் ஒருங்கிணைந்த வளாகங்கள் நடமாடும் மருத்துவர் அலகுகள் மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் உள்ளிட்ட மூத்த குடிமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நிலையில் முதியவர்கள் அமைதியான கண்ணியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்து அத்தியாவசிய வசதிகளை வழங்குவதை திட்டத்தின் நோக்கம் ஆகும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.