மறைந்த திமுக முன்னாள் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகனின் 103 வது பிறந்த நாளை ஒட்டி இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் "கழகம் எனும் களத்தை புயல்கள் தாக்கிய போதெல்லாம் தலைவர் கலைஞரின் பக்கத்துணையாய் நின்று கரை நோக்கி செலுத்திய பேராசிரியர் பெருந்தகையின் பிறந்தநாள். என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு புதிய உயரங்களை அடைய ஒவ்வொரு தருணத்திலும் அவரது நினைவு என்னை ஆட்கொள்ள தவறியது இல்லை. கழகத்தின் தொடர் வெற்றிகளை அவருக்கு என் அஞ்சலியாக உரித்தாக்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்...