எம்ஜியார் சிலை அருகே சிறுத்தை
01 December 2025
வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை வளாகத்தில் சிறுத்தை புலி ஒன்று நடமாடியது அதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் இதை அடுத்து எம்ஜிஆர் சிலை அருகே சிறுத்தை புலி சிறிது நேரம் அமர்ந்திருந்தது
அதை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர் பின்னர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்ட னர் அது வைரலாக பரவியது ரொட்டிக்கடை பகுதியில் அடிக்கடி சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர் மேலும் குழந்தைகளை வெளியே விளையாட விட தயங்கும் நிலை உள்ளது ஆனால் சிறுத்தை புலி பார்க்க சுற்றுலா பயணிகளை சிலர் அழைத்து வருகின்றனர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே சிறுத்தை புலி வருவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து செய்தியாளர் மா.ஜாபர் அலி.