நியூயார்க் நகரில் பிரம்மாண்டமாக வைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்

07 December 2025

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்பாடு பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ராக்பெல்லர் சென்டர் பகுதியில் சுமார் 7 மாடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தின் மீது சுமார் 50,000 வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அவை இரவு நேரங்களில் மிகவும் பிரகாசமாக ஜொலிக்கின்றன. 

இதுபோன்ற உயரமான கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் பழக்கம் பல ஆண்டு காலமாகவே பாரம்பரியமாக நிகழ்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு வைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும் ஏராளமான மக்கள் இந்த பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் மரத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.