டிட்வா புயல் இலங்கையில் கோர தாண்டவம் ஆடியுள்ளது. இதன் காரணமாக இலங்கையில் 2,66, 114 குடும்பங்களை சேர்ந்த ஒன்பது லட்சத்து 68, 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..
இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அவசர கால நிதி உதவியாக 10 லட்சம் டாலரை அறிவித்து நிதி உதவி அளித்துள்ளது. மேலும் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து பத்து டன் நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் இணைந்து மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்....