சீனாவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

10 December 2025

சீனாவின் தெற்கே அமைந்துள்ள குவாங்டங் மாகாணத்தில் உள்ள சாந்தவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து சற்று நேரத்தில் மல மல வென பரவியது. மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 


தகவலின் பெயரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. எனவே எதனால் தீ விபத்து ஏற்பட்டது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...