பராமரிப்பற்ற பூங்காவில் விளையாடும் குழந்தைகள்

27 October 2025

பராமரிப்பற்ற பூங்காவில் விளையாடும் குழந்தைகள்

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட தந்தை பெரியார் நகரில் உள்ள இரண்டு பூங்காக்களில் விஷப் பூச்சிகளும் பாம்புகளும் அதிகம் காணப்படுகின்றன. இதனால், அப்பகுதி இளைஞர்கள் மே மாதங்களில் பூங்காக்களைச் சுத்தம் செய்து விளையாட வசதியாகச் சரிசெய்து வருகின்றனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் பூங்காக்களைப் பராமரிக்க முன்வருவதில்லை. தற்போது செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால், குழந்தைகள் ஆபத்தை உணராமல் விளயாட்டு உபகரணங்களில் ஏறி விளையாடுகின்றனர்.

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பே நகராட்சி நிர்வாகம் பூங்காக்களைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.