டெல்லியில் தேசிய தலைமைச் செயலாளர் மாநாடு

22 December 2025

தலைநகர் புதுடெல்லியில் ஐந்தாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது.

மேலும் இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்க உள்ளார். இந்த மாநாட்டில் அந்தந்த மாநிலங்களுக்கான வளர்ச்சி திட்டங்களை மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அனைத்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மூத்த அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்...