கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு...

26 December 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு...


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட ரூ.1,773.67 கோடி செலவிலான 2,559 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்...



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.12.2025) கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 139 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் 202 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவிலான 2559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 386 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,16,056 பயனாளிகளுக்கு 1045 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை வழங்கினார்.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் 39.81 ஏக்கர் பரப்பளவில், 139 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. தே. மலையரசன், திரு. து. ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தா. உதயசூரியன், திரு. வசந்தம் க. கார்த்திகேயன், திரு. ஏ.ஜெ. மணிக்கண்ணன், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. மங்கத் ராம் சர்மா. இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி புவனேஸ்வரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்