மிகவும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளம் மேற்கு கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமி சுந்தரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பூர உற்சவம் நடைபெற்று வருவது வழக்கம்.. அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி பூர உற்சவம் கடந்த ஆறாம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வை ஒட்டி காலையில் கோவிலில் இருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி ஊர்வலமாக புறப்பட்டார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனைத் தொடர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர் இறுதியாக நிலையை அடைந்தது.