சத்தீஷ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டம் கடங்கா கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மனோரா கிராமத்தில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது பட்ரடோலி கிராமம் அருகே வந்தபோது அந்த வழியே எதிர்த்து செயல் லாரி வந்து கொண்டிருந்தது. இதில் கார் வேகமாக மோதியதில் காரில் இருந்த சிறுவன் உட்பட ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஐந்து பேரில் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்...