தென் அரபிக் கடல் பகுதியில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் தொடர் மழை பெய்தது. மேலும் சென்னைக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னையின் முக்கிய பகுதிகளான எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் கன மழை பெய்தது. மேலும் இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்...