வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை
21 January 2026
சென்னையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கம் விலை, இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.4,120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.14,415-ஆக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,45,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது சாமானிய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.