சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய நிர்மல் மற்றும் 18 வயதுடைய சந்தோஷ் குமார் ஆகிய இருவரும் இன்று காலை பாரிவாக்கம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் முன்னாள் சென்ற லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ஆரின் சக்கரம் அவர்கள் மீது ஏறி இறங்கியதில் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பெயரில் அங்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் நசீர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...