அக்டோபர் 27. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள கோவளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கேளம்பாக்கம் வட நெம்மேலி பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்ப்பட்டுள்ள 'மொந்தா' புயல் காரணமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு செல்வோருக்கும் சிரமம் ஏற்ப்பட்டுள்ளது. மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே 600கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவில் காக்கிநாடா -மசிலிப்பட்டிணம் இடையே புயல் நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
A. Mohamed sha