தீபாவளி பண்டு மோசடி

25 October 2025

தீபாவளி பண்டு மோசடி - பெண்கள் எஸ். பி அலுவலகத்தில் மனு


விழுப்புரம் பெரியார் நகரில் அம்மு டிரேடர்ஸ் மளிகைக் கடை நடத்தி வந்த ரமேஷ், பாணாம்பட்டு மக்களிடம் தீபாவளி பண்ட சீட்டு நடத்தி வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக முறையாக பண்டுகளை வழங்கி நம்பிக்கையைப் பெற்ற அவர், இந்த ஆண்டு தீபாவளி பண்டுகளை வழங்காமல் ரூ. 2 லட்சத்தை மோசடி செய்து தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட பெண்கள், பணத்தை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்கவும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.