சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

29 January 2026

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடித் தேடுதல் வேட்டையின் போது, மறைந்திருந்து தாக்குதல் நடத்திய இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பஸ்தார் சரக ஐ.ஜி. சுந்தர்ராஜ் இதுகுறித்து தெரிவிக்கையில், கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடமிருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 வீரர்கள் காயமடைந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் இப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருகின்றனர். கடந்த ஜனவரி 18-ஆம் தேதியும் இதே போன்றதொரு என்கவுன்ட்டரில் 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.